|
|
மகாசிவராத்திரி விழா.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................நிகழும் ஸ்ரீ கர வருடம் மாசி மாதம் 8 ம் தேதி 20 - 02 -2012 திங்கட் கிழமை மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணி முதல் விடியற்காலை வரை நான்கு காலம் அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனைகளும், பூஜைகளும்,கலை நிகழ்ச்சிகளும்,பாட்டு கச்சேரிகளும், நிகழ்ச்சி நிரல்களின்படி நிர்வாக பரம்பரை தர்மகர்த்தாவால் நடத்தப்பட உள்ளது. 20 . 02 .2012 திங்கட்கிழமை மாலை 4 .30 மணிக்கு மேல் முதல் காலம் அபிஷேகமும்,மாலை 6 .00 மணி வரை காஞ்சி மாவட்ட இந்து முன்னணி நடத்தும் 108 திருவிளக்கு பூஜைகளும், இரவு 8 .00 மணி முதல் 10 .00 மணி வரை குரு ஸ்ரீ " பினேஷ் மகாதேவன்" அவர்களின் "அக்சயா ஆர்ட்ஸ்" ஐயப்பநகர் கலைகுழுவினர் வழங்கும் பரத நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9.00 மணிக்குமேல் இரண்டாம் காலம் அபிஷேகமும், இரவு 11 .00 மணிக்குமேல் "இந்து முன்னணி" நடத்தும் கிராமிய கலை நிகழ்ச்சியும்,வில்லுபாட்டு மற்றும் பக்தி பாடல்களும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 .00 மணிக்குமேல் முன்றாம் காலம் அபிஷேகமும்,செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 .00 மணிக்கு மேல் நான்காம் காலம் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. |