சனிபகவான் கோரப்பார்வையினால் ஏற்படும் மாற்றங்கள்

.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையை இயக்கி வருவது கிரகங்கள்தான். இதில் சக்தி வாய்ந்ததும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற கிரகம்மான சனீஸ்வரர் பகவான் தான். சனிபகவான் மட்டும் தான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாரி பெயர்ச்சி அடைகிற கிரகம் சனி பகவான் தான். சனி பெயர்ச்சியின் போது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சனிபகவானின் கோரப்பார்வை பட்டால் இது உங்கள் குடும்பத்துக்கே பாதிப்பு ஏற்படுத்தும் சனி கோர பார்வையில் சிக்கினால் ராஜாவை பிச்சைகாரனகவும் பிச்சைகாரனை ராஜாவாக மாற்றும் சக்தி வாய்ந்த கிரகம் ஆகும். அதனாலதான் "சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை" என்பார்கள் அது நூற்றுக்கு நூறு உண்மை ஏனென்றால் சனிபகவான் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார். குறிப்பாக அது போன்று வாழ்கையில் பிறர்க்கு கெடுதல், தீமை செய்பவர்களுக்கு அவர்களுக்கு சனி பிடிக்கும் போது அவர்களை ஏழரை ஆண்டுகள் சனி பிடித்து ஆட்டிபடைப்பார். அப்பொழுது வாழ்கை இன்பத்தினை இழந்து, பதவி மற்றும் இருந்த வேலை இழந்து, வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு துன்பத்தினை அனுபவிப்பார்கள் இவர்கள் முழு பரிகாரம் செய்வதினை பொறுத்து மேற்கண்ட துன்பங்களில் இருந்து விலகி துன்பங்களை தாங்கி கொள்ளும் அளவுக்கு பலன்கள் கிடைக்கும்.