வரலாறு
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம்

தல வரலாற்று சுருக்கம

தல வரலாற்று சுருக்கம் சென்னை அருகே சென்னை விமான நிலையம் பின்புறம் 2 கி.மீ பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி,மீ தொலைவில் உள்ள பொழிச்சலூர் கிராமத்தில் இருக்கும் தொண்டை மண்டல நவகிரக பரிகார ஸ்தலங்களில் வட தமிழ்நாட்டில் இந்த ஓரே ஸ்தலம் மட்டும் தான் சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு பரிகார ஸ்தலமாக விளங்கும் பொழிச்சலூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் ஆகும். தமிழ்நாடு சுற்றுலாதுறை நவகிரக பரிகார ஸ்தலங்களில் சனி பகவானுக்கு பரிகார ஸ்தலமாக இந்த ஆலயத்தை அறிமுகப்படித்தி உள்ளது.

சனிபகவான் பிறர்க்கு எப்பொழுதும் கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, என்று பலவிதமாக பக்தர்களை பிடித்து வாட்டி வதைத்து துன்பம் கொடுத்து வந்ததால், அதனால் இவருக்கு ஏற்பட்ட தன் பாவங்களை போக்கிகொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டுபண்ணி சிவபெருமானை வழிபட்டு சனிபகவான் அவர் பிறர்க்கு செய்த தன் பாவத்தை போக்கி அவரது தோஷம் நீங்கி பாவ விமோசனம் கிட்டியதால், இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார். வடதமிழ்நாட்டில் சென்னையில் இந்த ஒரே ஆலயம் ஒன்றுதான் சனிபகவானுக்கு என்று சனிதோஷநிவர்த்தி பரிகார ஸ்தலமாகவும், நாடி ஜோதிடத்தின் பாவவிமோசனம் செய்ய பரிகார ஸ்தலமாகவும் சிறப்புற்று விளங்கிவருகின்றது.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நெய்வேத்தியம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமான நடமாடும் தெய்வமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும். இந்த நேரத்தில் தோஷநிவர்த்தி செய்பவர்களும் இவ்வாலயத்தில் உள்ள, வருகின்ற நடமாடும் தெய்வங்களாக உள்ள காக்கை, மாடு, நாய் இவற்றிக்கு அன்ன தீவணம் செய்தால் உங்களுக்கும் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.

பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும் கி.பி 12-ம் நூற்றாண்டு சோழ மன்னர் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் கஜபிருஷ்ட விமான அமைப்புடன் எங்கள் முன்னோர்களுக்கு சொந்தமான இடத்தில் எங்கள் முன்னோர்களால் கட்டப்பெற்றதாகும். இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர். இக்கோவிலுக்கு மற்றொரு குறிப்பிட்ட அம்சமும் உண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே கொண்டு சிறந்த புண்ணியதலமாக விளங்குகிறது.

இவ்வாலயத்தில் ஈசன் கிழக்கு பார்த்திருப்பதும் அம்மன் தெற்கு பார்த்திருப்பதும், சித்திரை 7,8,9 தேதிகளில் மட்டும் சூரியன் உதயம்; ஆகும்போது சூரியன் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது மட்டும் விழும் அமைப்புடன் வடக்குபுற வாசல் அமைப்பு கொண்டு கட்டப்பெற்றதாகும் இவ்வாலயத்தினை வேளாளர் மரபிலிருந்து தனிபட்ட குடும்பத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக, பரம்பரை தர்மகர்த்தா நிர்வாகத்தின் கீழ் நிர்வாகிக்கும் ஆலயம் ஆகும்.